அயோத்தி தீர்ப்பு – நீதித்துறை பேசும் காவி மொழி!!
மஸ்ஜிதுல் அக்சாவை தெரியாத முஸ்லிம்கள்
முஸ்லிம்களின் முதல் கிப்லா என்று சொல்லப்படும் மஸ்ஜிதுல் அக்சா எது என்று தெரியாத ஒரு வாழ்க்கையில் முஸ்லிம் சமூகம் இன்று வாழ்ந்து வருகிறது. இதற்கு காரணம் யூதர்கள்.
இந்த பள்ளிவாசல் தான் மஸ்ஜிதுல் அக்சா என்று இன்றைய உலகில் நம்ப வைத்து விட்டார்கள் யூதர்கள் ஆனால் இந்த பள்ளிவாசல் மஸ்ஜிதுல் அக்சா இல்லை .
தங்களுக்கு வாக்களிக்கப்பட்ட நிலமாக இஸ்ரவேலர்கள் கருதி கொண்டிருக்கும் நிலம் அனைத்தையும் தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது.
இவ்வுலக வாழ்க்கை
இவ்வுலக வாழ்க்கை |
MUST READ [ஒருமுறையல்ல நூறு முறை படிக்க வேண்டிய கட்டுரை] [ ''மறுமை(யின் வாழ்க்கை)க்கு முன்பாக இவ்வுலக வாழ்க்கை வெகு அற்பமானதே!'' (9:38)''இவ்வுலக வாழ்க்கை (மனிதனை) மயக்கும் சொற்ப இன்பமேயன்றி வேறில்லை.'' (57:20) ''இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும் கேளிக்கையுமேயன்றி வேறில்லை! எனினும் பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமையின் வாழ்க்கையே மிக மேலானது (இவ்வளவு கூட) நீங்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?'' (6:32)''உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும்; நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?'' (அல்குர்ஆன் 6:32) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பெரும் கருணை குர்ஆன் மூலம் வெளிப்படுவதைத் தெளிவாக மனிதன் அறிந்து கொள்கிறான். குர்ஆனின் மூலமே மறுமையைப் பற்றிய மிகச் சரியான உண்மைகளை இறை நம்பிக்கையாளர்கள் அறிந்து கொள்கிறார்கள். உண்மையான மார்க்கமே மறுமையைப் பற்றிய யதார்த்தங்களை அறிவிக்கவல்லது.] மனிதர்களை உண்மையான நேர்வழியில் செலுத்த வழிகாட்டும் இறுதி இறை வெளிப்பாடாகிய குர்ஆன், இவ்வுலக வாழ்க்கையின் நோக்கம் இறைவனுக்கு அடிபணிவதே ஆகும். மனிதன் இறைவனுக்கு அடிபணிகின்றானா அல்லவா என்று சோதிப்பதற்காகவே அவன் அனுப்பப்பட்ட இடம்தான் இவ்வுலகம் என்றும் குர்ஆன் அறிவிக்கின்றது.இந்தச் சோதனையில் மனிதனை நேர்வழியில் நின்றும் பிறழத் தூண்டும் வகையில் படைக்கப்பட்ட பிரத்தியேகக் கூறுகளைப் பற்றி அல்லாஹ் எச்சரிக்கின்றான்; அவற்றின் தன்மைகளைப் பற்றிக் கூறுகையில் அவை முற்றிலும் ஏமாற்றுபவை எனவும் அறிவிக்கின்றான்.உங்கள் பொருள்களைக் கொண்டும் உங்கள் ஆத்மாவைக் கொண்டும் நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். அல்குர்ஆன் 3:186 இவ்வுலகின் உண்மையான இயல்பை வர்ணிக்கும் வசனங்கள் பல குர்ஆனில் உள்ளன. அவற்றுள் சில கீழே தரப்படுகின்றன: ''உங்களுடைய செல்வமும், சந்ததிகளும் உங்களுக்குச் சோதனையே. ஆனால் அல்லாஹ்விடத்தில் உங்களுக்கு உங்களுக்கு மகத்தான கூலி உள்ளது. (அல்குர்ஆன் 64:15) ''பெண்களும்,ஆண் பிள்ளைகளும், தங்கம் மற்றும் வெள்ளியின் பெருங்குவியல்களும், உயர்ரகக் குதிரைகளும், கால்நடைகளும், வளம் மிகுந்த விளை நிலங்களும் எல்லாம் மனிதர்களைக் கவரும் வகையில் படைக்கப்பட்டுள்ளன. இவை யாவும் இவ்வுலக வாழ்க்கையின் வசதி வாய்ப்புகள். அல்லாஹ்விடத்தில் அழகிய தங்குமிடம் உள்ளது. (அல்குர்ஆன் 3:14) ''உங்களுக்கு வழங்கப்பட்டிருப்பவை அனைத்தும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய வசதிவாய்ப்புகளும், பகட்டணிகலன்களுமே ஆகும். அல்லாஹ்விடத்தில் உள்ளவை மேலானாவையும் நிலையானவையும் ஆகும். (இதை) நீங்கள் அறிந்து கொள்ள மாட்டீர்களா?" (அல்குர்ஆன் 28:60) சமூக தலைமை (அந்தஸ்து) செல்வவளம், சந்ததிகள், உயர் தரமான வாழ்க்கையும் அவையல்லாமல் ஏழ்மையும் மிக வறிய வாழ்க்கை நிலையும் எல்லாமே மனிதனை இவ்வுலகில் சோதிப்பதற்காக உள்ளவையே. குர்ஆன் வசனம் ஒன்று கூறுகிறது. ''அவன் (அல்லாஹ்) தான் உங்களை இப்புவியின் வாரிசுகளாக ஆக்கினான். மேலும் உங்களில் சிலரை மற்றவர்களை விட தலைமையில் (அந்தஸ்தில்) உயர்த்தியும் உள்ளான். உங்களுக்கு அருளப்பட்டவை மூலம் உங்களைச் சோதிக்கின்றான். உங்கள் இறைவன் தண்டிப்பதில் மிகத் தீவிரமானவன். அவன் பிழை பொருப்பவனும் பேரருள் உடையவனும் ஆவான்''. (அல்குர்ஆன் 6:165) வாழ்வும் மரணமும் மனிதனைச் சோதிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டவையே என்பதை கீழ்வரும் வசனம் கூறுகிறது. ''உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.'' (அல்குர்ஆன் 67:2) ''ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.'' (அல்குர்ஆன் 21:35) மனிதனுக்கு வழங்கப்படும் நன்மைகளும் ஆதரவுகளும் அதனைப் போலவே அவனிடமிருந்து பறிக்கப்படுபவையும் மனிதனைச் சோதனைக்குள்ளாக்குபவற்றில் உட்படுபவையே. அவனைச் சோதனைக்குள்ளாக்கி அவனுக்கு அருள் புரிந்து அவனை இறைவன் மேம்படுத்தினால் மனிதன் என்னுடைய இறைவன் என்னை மகிமைப்படுத்தி விட்டான் என்று கூறுகிறான். ஆனால் அவனுடைய செல்வத்தைக் குறைத்து அவனைச் சோதித்ததால் என் இறைவன் என்னை இழிவுபடுத்திவிட்டான் என்று கூறுகிறான். (அல்குர்ஆன் 89: 15.16) மறுமையே மனிதனுக்கு யதார்த்தமான வீடு (தங்குமிடம்) ஆகும் எனக் குர்ஆன் அறிவுறுத்துகிறது. புலனுணர்வுகளுக்கு அப்பாற்பட்ட எதையுமே உணர்ந்துகொள்ளும் ஆற்றலற்றவன் மனிதன், எதிர்காலம், இவ்விதம் மனிதன் உணர்ந்து கொள்ள முடியாதவற்றுள் ஒன்று. அடுத்த சில வினாடிகளில் என்ன நேரும் என்று யாருமே அறிய முடியாது. இத்தகைய வரையறைக்குட்பட்ட புலனுணர்வுடைய மக்கள் எல்லாக் காலங்களிலும் வருங்கால நிகழ்வுகள் பற்றி அறிய ஆர்வமுடையவர்களாக இருக்கின்றார்கள்; குறிப்பாக மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கை பற்றி அறிய மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். மனிதர்கள் ஆர்வமுடன் அறிய விரும்புபவை ஆகிய இந்தப் பிரபஞ்சம், மானிட வர்க்கம், இறப்பு, நீதித் தீர்ப்பு நாள், நரகம், சுவர்க்கம், வருங்காலம் கடந்த காலம் மற்றும் மறுமை ஆகியவற்றிற்கெல்லாம் காரணகர்த்தாவாகிய அல்லாஹ் ஒருவனே அறிவிக்க வல்லவன். இந்தப் பிரபஞ்சத்தையும் உயிரினங்கள் அனைத்தையும் அல்லாஹ் ''ஒன்றுமில்லாமை''யிலிருந்தே படைத்தான்; இன்னும் ஒவ்வொரு கணமும் படைத்துக்கொண்டே இருக்கின்றான். இப்பிரபஞ்சத்தில் ஓர் அம்சமாக விளங்கும் காலத்தையும் அல்லாஹ்வே திட்டமிட்டு வகுத்துள்ளான்.காலத்திற்கு எல்லா படைப்பினங்களும் கட்டுப்பட்டாக வேண்டும். அல்லாஹ்வோ காலத்திற்கு கட்டுப்பட்டவன் அல்லன். காலததிற்கும் இடத்திற்கும் அப்பாற்பட்டவன் அல்லாஹ். காலத்தின் கட்டுப்பாடின்றியே அல்லாஹ் யாவற்றையும் பரிமாணத்தோடு படைத்தான். நாம் கடந்தவை என்றும் நிகழ்ந்து கொண்டிருப்பவை என்றும் கருதும் யாவற்றையும் முழுமையாக அறிந்த நிலையில் ஒரு நொடியில் படைத்தான். நம்முடைய புலனுக்கு எட்டாத பிற்காலம் உட்பட யாவுமே ''மறையானவை'' என்று குறிப்பிடப்படுகின்றன. ''மறுமை''யும் கூட மனிதர்கள் இம்மையில் வாழும் காலம் வரை ''மறைவான''வற்றில் ஒர் அம்சமாகவே விளங்கும். ''மறுமையை'' பற்றிக் குறிப்பிடும் குர்ஆன் அதைப் பற்றிய விவரங்களைத் தருகின்றது. ஒவ்வொரு காலகட்டத்திலும் தத்துவ ஞானிகள் பல்வேறு கலாச்சாரங்களில் காணப்படுகின்ற மூட நம்பிக்கைகளோடு இணைந்து, மறுமையைப் பற்றி பல அனுமானங்களைக் கூறுகின்றனர்.இவ்வுலக வாழ்க்கையில் பற்றும் சொத்தும் செல்வமும் குவிப்பதில் ஆர்வமும், மக்களை உலகில் வசதி வாய்ப்புகளை அடையும் முயற்சியில் நின்றும் விடுபட விடுவதில்லை. தொல்லைகளும் இடர்ப்பாடுகளும் எதிர்படும் போது ஏமாற்றமடைந்து நம்பிக்கை இழப்பார்கள். இத்தகைய மன நிலையை குர்ஆன் கீழ் வருமாறு வர்ணிக்கிறது. ''நம்முடைய அருட்கொடையை மனிதன் நுகரச் செய்து அதன்பின் அதனை அவனிடமிருந்து பறிக்கப்பட்டால் அவன் நம்பிக்கை இழந்து நன்றி கெட்டவனாக ஆகிவிடுகின்றான். அவன் அனுபவித்த இடர்ப்பாடுகளை நீக்கி நம்முடைய அருட்கொடைகளை நுகரச் செய்தால் ''என்னுடைய துன்பங்கள் நீங்கிவிட்டன'' எனக் கூறி பெரும் மகிழ்ச்சியடைந்து பெருமை பாராட்டுகிறான். (அல்குர்ஆன் 11:9,10) எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அனைத்து நிகழ்வுகளையும் குர்ஆனின் நெறிமுறைக்கு உகந்து விளங்கி, இறையுணர்வு நீங்காமல் மறுமையின் நினைவு மாறாமல் மனிதனின் நிரந்தர வீடாகிய மறுமையை அடையும் நோக்கோடு இறை நம்பிக்கையாளன் நிலை தவறாமல் முயலுகின்றான். ''இவ்வுலகில் ஓர் அந்நியனைப் போல் அல்லது ஒரு பிரயாணியைப் போல் வாழ்வீராக'' எனும் நபி மொழி (அல்புகாரி)க்கு ஏற்ப இவ்வுலக வாழ்க்கையை நிரந்தரமானது என்றும் நம்பி வாழ்வான். எனவேதான் இறை நம்பிக்கையாளர்கள் ஏராளமான நன்மைகளும் பேறுகளும் கிட்டும் போது வழி பிறழுவதுமில்லை; அவற்றை இழக்க நேரும்போது ஊக்கம் இழந்து சோர்வடைவதும் இல்லை.பேறுகளும் நன்மைகளும் அவை போன்று இழப்புகளும் எல்லாம் சோதனையே எனும் உண்மையை உணர்ந்தவர்களாக இறை நம்பிக்கையாளர்கள் அல்லாஹ் விரும்பும் நேரும் நிகழ்வுகளை எல்லாம் கீழ்வரும் இறை வசனத்தை நினைவு கூர்ந்து ஏற்றுக் கொள்வார்கள். ''ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே தீரும். நன்மையும் தீமையும் அனுபவிக்கும் நிலைக்கு உள்ளாக்கி நாம் உங்களைச் சோதிப்போம். நீங்கள் நம்மிடமே மீள்வீர்கள்.'' (அல்குர்ஆன் 21:35) இதனை உணரும்போது, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பெரும் கருணை குர்ஆன் மூலம் வெளிப்படுவதைத் தெளிவாக மனிதன் அறிந்து கொள்கிறான். குர்ஆனின் மூலமே மறுமையைப் பற்றிய மிகச் சரியான உண்மைகளை இறை நம்பிக்கையாளர்கள் அறிந்து கொள்கிறார்கள். உண்மையான மார்க்கமே மறுமையைப் பற்றிய யதார்த்தங்களை அறிவிக்கவல்லது. உண்மையான மார்க்கமே மனிதனுக்கு இவ்வுலக வாழ்க்கையின் நிலையற்ற தற்காலிக நிலையையும், நிரந்தரமான மறுமை வாழ்க்கையையும் பற்றி அறிவிக்கிறது. மனிதனின் நற்செயல்களுக்கும் தீயச் செயல்களுக்கு ஏற்ப கூலி வழங்கப்படும் ஒரு நாளைப் பற்றிக் குர்ஆனில் அறிவிக்கப்பட்டுள்ளது. மரணவேளை, நீதித் தீர்ப்பு நாள், சுவர்க்கம் மற்றும் நரகம் பற்றிய தகவல் தரும் தனிச் சிறப்பு வாய்ந்த ஒரே மூலம் குர்ஆனே ஆகும். இறைவனின் இறுதி வெளிப்பாடாகிய குர்ஆன் பல வசனங்களில் மனிதனின் நிரந்தர வீடு மறுமையே என அறிவிக்கின்றது. அவற்றுள் ஒன்று: ''உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும்; நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?'' (அல்குர்ஆன் 6:32) இந்த இறைவசனத்தில் இந்தச் சோதனை வாழ்க்கையை விளங்கிக் கொள்ள முடியாத உணர்வற்ற ஒரு மனிதனின் மனப்போக்குத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இறை நம்பிக்கையாளர்கள் இத்தகைய உணர்வற்ற மனப்போக்கைப் பற்றி எச்சரிக்கப்படுவதோடு, அவர்களின் இம்மை வாழ்க்கையின் யதார்த்த நோக்கத்தைக் குறித்துத் திரும்பத் திரும்ப நினைவூட்டப்படுகிறார்கள். ''எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டும்) விரும்பினால், அவர்கள் செயலுக்குரிய பலனை இவ்வுலகத்திலேயே நாம் முழுமையாகக் கொடுத்து விடுவோம். அதில் அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள்''. (11:15) ''அல்லாஹ் தான் விரும்பியவர்களுக்கு ஏராளமாகக் கொடுக்கிறான் (தான் விரும்பியவர்களுக்கு) குறைத்தும் கொடுக்கிறான். எனினும், (நிராகரிப்பவர்கள்) இவ்வுலக வாழ்க்கையைக் கொண்டே சந்தோஷமடைகின்றனர். இவ்வுலக வாழ்க்கையோ மறுமையுடன் (ஒப்பிட்டுப் பார்த்தால்) மிக்க அற்பமேயன்றி வேறில்லை.'' (13:26''அவர்களில் சிலருக்கு இன்பமனுபவிக்க நாம் கொடுத்திருக்கும் (வாழ்க்கை வசதிகளின்) பக்கம் உமது கண்களை நீட்டாதீர்; (இவையெல்லாம்) அவர்களைச் சோதிப்பதற்காகவே நாம் கொடுத்துள்ள உலக வாழ்க்கையின் அலங்காரங்களாகும். உமது இறைவன் (மறுமையில் உமக்கு) வழங்கவிருப்பது சிறந்ததும் நிலையானதும் ஆகும். (அல்குர்ஆன் 20:131) ஆனாலும் இவ்வுண்மைகளை ஊன்றிக் கவனித்து உணர முடியாதவர்கள் இந்த உலக வாழ்க்கையில் வசதி வாய்ப்புகளில் மயங்கி விடுகின்றனர். |
எல்லா நாட்களும் நல்ல நாட்களே
எல்லா நாட்களும் நல்ல நாட்களே! |
K.L.M.இப்ராஹீம் மதனீ அல்லாஹ் படைத்த எல்லா நாட்களும் நல்ல நாட்கள்தான், சில நாட்கள் நல்லதென்றும் சில நாட்கள் கெட்டதென்றும் கருதுவது கூடாது. இது இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் மிக பெரும் குற்றமும் மூட நம்பிக்கையுமாகும். ஒவ்வொரு நாளும் அது சிலருக்கு சந்தோஷமான நிகழ்வுகள் நடக்கக்கூடியதாகவும் சிலருக்கு கவலையான நிகழ்வுகள் நடக்கக்கூடியதாகவும் இருக்கும். அல்லது, ஒருவருக்கு இரண்டு நிகழ்வுகளும் ஒரே நாளில் நடக்கவும் செய்யும். இதை வைத்து அந்த நாளை நல்ல நாள் என்றோ கெட்ட நாள் என்றோ கூறிவிட முடியாது. இவ்வுலகம் சோதனைக் கூடமாகும். மரணிக்கும் வரை ஒவ்வொரு மனிதனும் பல விதமான சோதனைகளைக் கொண்டு சோதிக்கப்பட்டுக் கொண்டே இருப்பான். சோதனைகள் வரும்போது அதை ஒரு முஸ்லிம் பொறுத்துக் கொள்ளவும் பொருந்திக் கொள்ளவும் வேண்டும். அது அவனுடைய பாவங்களுக்கு பரிகாரமாக அமைகின்றது. இவ்வாறு ஒவ்வொரு முஸ்லிமும் நம்ப வேண்டும். இப்படி ஈமான் கொள்வது ஈமானின் அடிப்படைகளில் ஒன்றாகும். அல்லாஹ்வையும் வானவர்களையும் நபிமார்களையும் கியாமத் நாளையும் நல்லதும் கெட்டதும் அல்லாஹ் விதித்த விதியின்படி நடக்கின்றது என்று ஈமான் கொள்வதுதான (உண்மையான) ஈமானாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)ஆகவே நமக்கு நடக்கக்கூடிய நல்ல கெட்ட காரியங்கள் அனைத்தும் அல்லாஹ் நம்மீது விதித்த விதியின்படியே நடக்கின்றதென்று நம்ப வேண்டுமே தவிர, இன்று கெட்ட நாள், இதனால்தான் எனக்கு இந்த ஆபத்து நடந்ததென்று கூறுவது மூட நம்பிக்கையும் இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்க்கக்கூடிய ஒன்றாகும். சோதனையின்றி வாழ்வில்லை அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான். ''நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!'' (அல்குர்ஆன் 2:155)நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ''முஃமினான ஆண்களும் பெண்களும் தூய்மையானவர்களாக (பாவமற்ற நிலையில்) அல்லாஹ்வை சந்திக்க வேண்டுமென்பதற்காக அவர்கள் விஷயத்திலும் அவர்களின் பிள்ளைகள் விஷயத்திலும் அவர்களின் பொருள் விஷயத்திலும் அவர்கள் மரணிக்கும் வரை அவர்களுக்கு சோதனை வந்து கொண்டே இருக்கும்''. (ஆதாரம்: திர்மிதி) ஒவ்வொன்றும் அல்லாஹ்வின் விதிப்படியே நடக்கின்றது ஒவ்வொரு மனிதனும் தனக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களை இது அல்லாஹ்வின் ஏற்பாட்டினால் தான் (களா கத்ரினால்தான்) ஏற்பட்டதென்றும், நான் பிறப்பதற்கு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இது எழுதப்பட்டு முடிந்து விட்டதென்றும் இது நடக்காமல் இருப்பதற்கு வாய்ப்பே இல்லையென்றும் நம்பாத வரை அவர்கள் உண்மையான முஃமினாக முடியாது. இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள், ''இப்னு உமரின் ஆத்மா யார் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! களாகத்ரை (விதியை) ஈமான் கொள்ளாதவர், உஹது மலை அளவு தங்கத்தை அல்லாஹ்வின் வழியில் செலவு செய்தாலும் அதை அல்லாஹ் ஏற்கமாட்டான் எனக்கூறி, இதற்கு ஆதாரமாக பின்வரும் ஹதீஸை கூறினார்கள். அல்லாஹ்வையும் வானவர்களையும் ரஸுல்மார்களையும் கியாமத் நாளையும் நல்லதும் கெட்டதும் அல்லாஹ் விதித்த விதியின்படி நடக்கின்றது என்று ஈமான் கொள்வதுதான் (உண்மையான) ஈமானாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.'' (ஆதாரம்: முஸ்லிம்) உபாதா பின் சாமித் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தன் மகனைப்பார்த்து, மகனே! உனக்கு ஏற்படுகிற துன்பங்கள் அல்லாஹ்வின் விதியேயாகும். அது உனக்கு வராமல் போய்விடாது என்ற உண்மையையும், உனக்கு ஏற்படாது சென்றுவிட்ட துன்பங்கள் உனக்கு வரவேண்டியதல்ல என்ற உண்மையையும் நீ அறிந்து கொள்ளாதவரை நிச்சயமாக நீ உண்மையான ஈமானின் சுவையைப் பெற்றுக் கொள்ளமாட்டாய் எனக்கூறி, பின்வரும் ஹதீஸையும் எடுத்துக் கூறினார்கள்.அல்லாஹ் எழுது கோலை முதலில் படைத்து நீ எழுது எனக் கட்டளையிட, எதை எழுத வேண்டும் என அது கேட்க, இறுதிநாள் வரைக்கும் எல்லாவற்றிற்கும் உண்டான விதிகளை எழுது என அல்லாஹ் கட்டளையிட்டான், என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் எனக் கூறி, மகனே! இவ்வாறு விதியை நம்பாது ஒருவர் மரணித்து விடுவாராயின் அவர் என்னை சார்ந்தவரல்ல என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் எனவும் எடுத்துரைத்தார்கள். (ஆதாரம்: அஹ்மத்) இப்னு அபூதைலமீ அவர்கள் அறிவிக்கிறார்கள், நான் உபை பின் கஃபை அணுகி, என் உள்ளத்தில் விதியைப்பற்றி சிறிது சந்தேகம் உள்ளது. அதை நீக்குவதற்கு ஏதாவது சொல்லித்தாருங்கள். அல்லாஹ் அந்த சந்தேகத்தை போக்கிவிடுவான் என்று கூறினேன். அதற்கு உபை பின் கஃபு ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். ''(இப்னு அபூ தைலமியே!) நிச்சயமாக உமக்கு ஏற்படும் துன்பங்கள் அல்லாஹ்வின் விதியேயாகும். அது உமக்கு வராமல் போகாது என்ற உண்மையையும், உமக்கு எற்படாது சென்றுவிட்ட துன்பங்கள் உமக்கு வரவேண்டியதல்ல என்ற உண்மையையம் அறிந்து, களா கத்ரைக் கொண்டு நீர் ஈமான் கொள்ளாதவரை உஹது மலை அளவு தங்கத்தை செலவு செய்தாலும் அதை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான். இவ்வாறு நீர் களாகத்ரைக் கொண்டு ஈமான் கொள்ளாது மரணித்துவிட்டால் நீர் நரகவாசிகளில் ஒருவரே என்றார்கள். பின்பு நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடமும் ஹுஸைஃபா பின் அல்யமான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடமும் வந்தேன். இவர்கள் எல்லோரும் இது போலவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக கூறினார்கள். (ஆதாரம்: அஹ்மத், அபூதாவூத்) சோதனை வருவது அல்லாஹ் நம்மீது வைத்திருக்கும் நேசத்தையே வெளிக்காட்டுகின்றது. அல்லாஹ் தன் அடியாருக்கு நலவை நாடினால் இவ்வுலகிலேயே தண்டனை (சோதனை)யை வழங்குகின்றான். அல்லாஹ் தன் அடியாருக்கு கெடுதியை நாடினால் மறுமையில் தண்டனையை முழுமையாக வழங்குவதற்காக இவ்வுலகில் எவ்வித தண்டனையும் (சோதனையும்) வழங்குவதில்லை, அதிக சோதனையுடன்தான் அதிக கூலியும் கிடைக்கும், அல்லாஹ் ஒரு கூட்டத்தை நேசித்தால் அவர்களை சோதிப்பான். அதை யார் பொருந்திக் கொள்கின்றார்களோ அவருக்கு அல்லாஹ்வின் பொருத்தம் கிடைக்கின்றது, யார் அதை கோபிக்கின்றாரோ அவருக்கு அல்லாஹ்வின் கோபம் கிடைக்கின்றது என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதிஸஃபர் மாதமும் மற்ற மாதங்களைப் போன்று நல்ல மாதம்தான் சோதனைகள் அனைத்தும் அல்லாஹ்வின் விதிப்படியே நடக்கின்றது என நம்ப வேண்டிய ஒரு முஸ்லிம், ஸஃபர் மாதம் பீடையுள்ள மாதம் என்றும், அதில் நல்ல காரியங்கள் செய்யக்கூடாது என்றும், பீடையயை களிப்பதற்காக ஸஃபர் மாதத்தின் மூன்றாம் புதன் கிழமை ஆற்றில் குடும்பத்துடன் குளித்து இன்னும் இது போன்ற பல சடங்குகளையும் செய்து அந்தப்பீடையை போக்கவேண்டும் என்று எண்ணி பல சடங்கு சம்ரிரதாயங்களை ஸஃபர் மாதத்தில் நமது இஸ்லாமிய பல சகோதர சகோதரிகள் செய்கின்றார்கள். இது இஸ்லாத்திற்கு முற்றிலும் மாற்றமான செயலும் மூட நம்பிக்கையுமாகும். இப்படிப்பட்ட இஸ்லாத்திற்கு மாற்றமான நம்பிக்கைகளை விட்டுவிட்டு அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றது என்று நம்ப வேண்டும். ஸஃபர் மாதம் பீடையுள்ள மாதம் என்றிருந்தால் அதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு அறிவித்திருப்பார்கள். அப்படிப்பட்ட எந்த இறை வசனமோ நபி மொழியோ கிடையாது. மாறாக ஸஃபர் மாதம் பீடையுள்ள மாதம் என்று நம்புவதை தடுக்கும் நபிமொழியைத்தான் பார்க்க முடியும்.இஸ்லாத்தில் தொற்றுநோய் என்பதில்லை, துர்ச்சகுணம் பார்ப்பது கூடாது, ஆந்தை சாஸ்திரம் பார்ப்பதும் கூடாது, சஃபர் (மாத பீடையும்) கிடையாது, நட்சத்திர சகுணம் பார்ப்பதும் கிடையாது, கொள்ளி வாய்ப் பிசாசுமில்லை என நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்) ஸஃபர் மாதத்தை பீடையுள்ள மாதம் என்பதற்கு, இந்த மூட நம்பிக்கையுள்ளவர்கள் கூறும் காரணம், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஃபர் மாத முற்பகுதியில் நோயுற்றிருந்து அம்மாதத்தின் மூன்றாம் வாரத்தின் புதன் கிழமை நோயிலிருந்து குணமடைந்தார்கள். ஆகவே அம்மாதம் பீடையுள்ள மாதமாகும், மூன்றாம் வாரத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோயிலிருந்து குணமடைந்தது போல், நாமும் பீடையை மூன்றாம் வாரத்தில் நீக்க வேண்டும் என்று கூறுகின்றார்கள். ஆனால் இது முற்றிலும் தவறான வாதமாகும். நோயுறுவது பீடையா? முன்பு கூறியது போன்று இது அல்லாஹ்வின் விதிப்படி நடந்ததென்று ஒரு முஸ்லிம் நம்ம வேண்டும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஸஃபர் மாதத்தில் மட்டுமா நோயுற்றிருந்தார்கள்? ரபீஉல் அவ்வல் மாதத்திலும்தான் நோயுற்றிருந்தார்கள், இதை யாரும் மறுக்க முடியாது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணிப்பதற்கு முன் கிட்டத்தட்ட 17 நாட்கள் நோயுற்றிருந்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரபீஉல் அவ்வல் மாதம் பிறை 12ல் மரணித்தார்கள், அந்த நாளை யாராவது பீடையுள்ள மாதம் என்று கூறுகின்றார்களா? அதை கொண்டாடும் நாளாக அல்லவா? எடுக்கின்றார்கள். நமக்குள் நாமே முரண்படுகின்றோம்.ஆகவே ஸஃபர் மாதத்தையும் மற்ற மாதங்களைப் போன்று நல்ல மாதமாக நினைத்து நமது அன்றாட காரியங்களை செய்ய வேண்டும். ஸஃபர் மாதத்தில் ஏதும் சோதனைகள் வந்தால்கூட அது ஸஃபர் மாத்தினால் ஏற்படவில்லை, அல்லாஹ்வின் ஏற்பாட்டினால்தான் வந்தது என்று நம்ப வேண்டும். இப்படிபட்ட உறுதியான ஈமானை அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக! |
கண்றாவி தினம்
[ ''கண்றாவி தினம்'' என்று சொல்வதுகூட தவறுதான். ஏனெனில் இறைவன் படைத்த அத்தனை நாட்களும் நன்நாளே. ஆனால் மனிதர்கள் தத்தமது செயல்படுகளால் அந்நன்நாளை மோசமான நாளாக மாற்றிக் கொள்கின்றனர்.]
பெண்மையை, இளமையை, பண்பாட்டுப் பெருமையைக் கூறுபோடும் விதமாக காதலர் தினம் என்ற பெயரில் கன்றாவி தினத்தை மேற்கத்திய கலாச்சார சீரழிவை நம்நாட்டிலும் சில வேலையற்றது இறக்குமதி செய்து தொலைத்துள்ளனர்.
விற்பனைக் கண்காட்சிகளை நடத்துவதைப் போல வாழ்த்து அட்டைகளும், காதல் ஈமெயில்களும் தடபுடலாய் பரிமாறிக் கொள்கின்றனர். கலாச்சார சீரழிவின் மொத்த குத்தகைதாரர்களான தொலைக்காட்சி சேனல்கள் காதலர் தினத்தை வைத்து நிகழ்ச்சிகள் நடத்தி கணிசமாய் காசு பண்ணி விடுகின்றன.
இளசுகள் கூடும் இடங்களில் பச்சை வண்ண உடை அணிந்து சென்றால் நான் ரெடி (இன்னும் எனக்கு காதலர் (அ) காதலி இல்லை) என்பதை உணர்த்தும் சிக்னலாம். இதை வைத்து புதிதாக தங்கள் காதல் ஜோடியை தேடிக் கண்டுபிடிக்கின்றனர். ரோஜாக்களின் மவுசு கூடுகிறது. மணக்கும் ரோஜா, மயக்கும் மல்லிகை, கசங்கும் காகிதப் பூ வரை விலை ஏற்றத்தில் இறக்கை கட்டி பறக்கும். இளைய தலைமுறை யினரின் சிந்தனையில் சிதிலங்களை ஏற்படுத்திவரும் இத்தகைய கொண்டாட்டங்கள் கண்டிக்கப்பட வேண்டும்.
கல்வி கற்க வேண்டிய வயதில், தனது எதிர்கால வாழ்க்கைப் பாதையை தெரிந் தெடுத்துக் கொள்ள வேண்டிய சரியான பருவத்தில் நற்குணங்களுடன், நன்னடத்தையுடன் தனது தாய் தந்தையரையும் சுற்றத்தாரை யும் பெருமைப்படுத்த வேண்டிய பருவத்தில், சில்லறைத்தனமான இதுபோன்ற நிகழ்ச்சிகளில் மனதை இளைய தலைமுறையினர் பறிகொடுத்து விடக்கூடாது.
நமக்குத் தெரிந்த எத்தனையோ இளைஞர்கள், இளைஞிகள் இந்தக் காதல் கன்றாவியால் தங்கள் எதிர்காலத்தைத் தெளிவாக தெரிந்தெடுக்கும் வாய்ப்பினை இழந்து துயரப்படுகிறோம் என்றும் மற்றும் இளைஞர் இளைஞிகள் காதல் செய்யும்போது வசந்த மாகத் தெரிந்த வாழ்வு பின்னர் இருண்டு வறண்டு காட்சியளிக்கிறது என்றும் மனம் வெறுத்து சொன்னதைக் கண்ணால் பார்த்திருக்கிறோம்.
இன்னும் சிலர் எனக்கு அருமையான வாழ்க்கையை அமைத்துத்தர என் பெற்றோர் ஆயத்தமாக இருந்தனர். ஆனால் அவசரத் துடுக்கினால் அதல பாதாளத்தில் வீழ்ந்து விட்டேனே எனக் கதறியவர்களும் உண்டு.
விபரம் அறியாது, விபரீதம் புரியாது காதல் கட்டுக் கதைகளை இளைஞர்கள் தங்களுக்குள் ஊக்குவிப்பதால் அந்தப் பகுதியிலுள்ள இளம்பெண்களின் இதயமும் நஞ்சாகிறது.
இளைஞன் ஒருவன் ஜம்பமாக, பந்தாவாக கல்லூரியில் தன்னை மஞ்சுளாவும், மரிக்கொழுந்தும் மாறி மாறி காதலிப்பதாக கதை விடுவதும், அதைக்கண்டு தானும் ஒரு மாரிமுத்துவையோ, மாயாண்டியையோ விரும்பினால் ஒன்றும் தவறல்ல எனும் விபரீத முடிவுக்கு அவனது சகோதரியோ அல்லது அடுத்த வீட்டு இளம் பெண்ணே வரும் அபாயத்தையும் எதிர்கொள்ள வேண்டிவரும். அருமை அருமையாய் வளர்த்தெடுத்த மக்களால் அவமானம் சுமக்கும் அவல நிலைக்கு பெற்றோர்கள் ஆளாகலாம்.
இன்னும் சிலர் காதலித்த பெண்ணை முஸ்லிமாக மாற்றித்தானே திருமணம் செய்து கொள்கிறோம். இவருக்கு ஏன் பொறாமை, போய்யா பொத்திக்கிட்டு என்று கோபத்துடன் குமுறுகிறார்கள்.
எத்தனை சமாதானங்கள் கூறினாலும் காதல் என்பது வெறும் இனக்கவர்ச்சி மட்டுமே என்பதை அடித்துக் கூற முடியும். சமுதாயத்தில் திருமணமாகாமல் காத்திருக்கும் ஏழைப் பெண்களின் தொகை விலைவாசி போல் உயர்ந்து வரும்போது குறைந்தபட்சம் தனக்கு ஏற்ற பெண்ணை இங்கே தேடி மணமுடிக்க வேண்டும். அதை விடுத்து இவனே இன்னும் சிலகாலம் கழித்து கறுப்பு வெள்ளைத் தாடியுடன் நீண்ட காலமாக திருமணமாகாமல் இருக்கும் தனது சகோதரிக்காக (அ) மகளுக்காக கவலைப்பட்டுக் கொண்டு 'இந்த சமுதாயம் ஏன் இப்படி இருக்கிறது' என்று புலம்பும் நிலை அவனுக்கும் வரும்.
சமுதாயத்தின் சரிபாதியாகத் திகழும் பெண்களின் பல்வேறு நலன் நாடும் விஷயங்களில் இதை நாம் எவ்வாறு மறந்தோம்.
காதல், காதலர் தினம் போன்றவற்றை கழிவுகளாகக் கருதி, திருமண இணை தேடும் விஷயத்தில் தெளிவினைப் பெறுவோம்.
''Jazaakallaahu khairan''
அபுசாலிஹ் TMMK
கடலில் முழ்கும் ஆபத்து
இன்னும் 90 ஆண்டில் சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்கள் கடலில் மூழ்கும் ஆபத்து ஏற்பட்டு இருப்பதாக விஞ்ஞான தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச சுற்றுச்சூழல் மாற்றம் அமைப்பு 2007-ம் ஆண்டு உலக வெப்ப மயத்தால் ஏற்படும் மாற்றம் குறித்து ஒரு ஆய்வு அறிக்கை வெளியிட்டது.
அதில் இந்த நூற்றாண்டு முடிவில் கடல் நீர்மட்டம் 18 சென்டி மீட்டரில் இருந்து 59 சென்டி மீட்டர் வரை உயரும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஆனால் முன்பு குறிப்பிட்டதை விட கடல் மட்டம் அதிக அளவில் உயரும் என்று இப்போது வெளி வந்துள்ள ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
அண்டார்டிகா விஞ்ஞான ஆராய்ச்சி குழு என்ற அமைப்பு புதிய ஆய்வை நடத்தியது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து 180 விஞ்ஞானிகள் இடம் பெற்று இருந்தனர்.
அவர்கள் ஆய்வை முடித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளனர்.அதில் கூறி இருப்பதாவது:-
இந்த நூற்றாண்டு முடியும் காலமான 2099-ம் ஆண்டில் கடல் மட்டம் 1.4 மீட்டர் (4 அடிக்கு மேல்) உயரும்.
இதனால் குறைந்த உயரம் கொண்ட பல்வேறு தீவுகள் கடலுக்குள் மூழ்கி விடும். மாலத்தீவு போன்ற நாடுகளில் 2100-ம் ஆண்டு மக்கள் வசிக்க முடியாத அளவுக்கு முற்றிலும் கடல் நீர் சூழ்ந்து விடும். பல தீவுகளிலும் உள்ள மக்கள் அங்கிருந்து வேறு பகுதிக்கு குடியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.
தீவுகள் மட்டும் அல்ல பல கடலோர நகரங்களுக்கும் ஆபத்து ஏற்படும். இந்திய தீபகற்ப பகுதியில் உள்ள நகரங்களுக்கும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது. இந்தியாவில் சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்கள் கடலில் மூழ்கும் ஆபத்து நேரிடலாம்.
இந்த பகுதிகளில் 1 மீட்டர் உயரம் வரை கடல் நீர் மட்டம் அதிகரிக்கும். எனவே கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் தற்போதைய நிலையில் இருந்து 1 மீட்டர் உயரம் வரை உள்ள பகுதிக்கு குடியேற வேண்டிய கட்டாய நிலை உருவாகும்.
அண்டார்டிகா, கிரீன்லாந்து பகுதிகளில் உள்ள பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. எனவே தான் எதிர்பார்த்ததை விட கடல் நீர் மட்டம் அதிகரித்தப்படி உள்ளது.
அண்டார்டிகா பகுதியில் அடர்த்தியாக இருந்த பனிக்கட்டிகள் இப்போது தடிமன் குறைந்து காணப்படுகின்றன. 90 சதவீதம் பனிக்கட்டிகளில் இந்த பாதிப்பு காணப்படுகிறது. மத்திய அண்டார்டிகா பகுதியில் இது வரை பாதிப்பு இல்லாமல் இருந்தது. இப்போது அங்கும் பனிக்கட்டிகள் உருக தொடங்கி இருக்கின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கடல் நீர்மட்டம் 1870-ம் ஆண்டில் இருந்தே உயரத் தொடங்கி இதுவரை 20 சென்டி மீட்டர் அளவுக்கு உயர்ந்து உள்ளது. அதாவது ஆண்டுக்கு சராசரியாக 1.7மில்லி மீட்டர் அளவுக்கு உயர்ந்தது.
இப்போது ஆண்டுக்கு 2.5 மில்லி மீட்டர் அளவுக்கு உயர்ந்து வருகிறது