பெண் சிசு கொலைக்கு துணை போகும் கூகிள் நிறுவனம்

பெண் சிசுக் கொலைக்கு துணைபோகும் கூகுள் தலைவரை கைது செய்!

பெண் குழந்தை என்றால் சில மேல்தட்டினர் கருவிலேயே கொன்று விடுவதும், சில அடித்தட்டினர் பிறந்த பிறகு கொல்வதும் இம்மண்ணில் நடந்து வரும் பெருங்கொடுமைகளாகும். எனவே கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என அறியும் பரிசோத னைக்கு இந்தியாவில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆயினும் பல மருத்துவமனைகள் சட்டத்துக்குப் புறம்பாக பெண் சிசுக் கொலைக்குத் துணைபோய்க் கொண்டிருக்கின்றன.

கருவில் இருக்கும் சிசு ஆணா? பெண்ணா? என்பதை அறியும் மருத்துவ சோதனைக்குத் தடை இருந்தாலும் பல மருத்துவமனைகள் இந்த சட்டவிரோதச் செயலை விளம்பரத்தோடு செய்து வருகின்றன. குறிப்பாக, கூகுள் இணையதளத்தில் இத்தகைய விளம்பரங்கள் இடம்பெறுகின்றன.

பலமுறை எச்சரிக்கப்பட்ட பிறகும் கூகுள் இணையதளத்தில் இவ்விளம்பரங்கள் தொடர்ந்து வருவதால் கூகுள் நிறுவ னத் தின் இந்தியத் தலைவரைக் கைது செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் உறுப்பினர் பிருந்தா காரந்த் மாநிலங்களவையில் ஆவேசமாக வாதிட்டார்.
பகிரங்கமாகவும், ரகசியமாகவும் நடந்துவரும் பெண் சிசுக் கொலைகளால் இந்தியாவில் பெண்களின் சதவீதம் குறைந்து வருவது கவலைக்குரியது.

பல நாடுகளில் ஆண்களின் எண்ணிக் கையைவிட பெண்களின் எண்ணிக்கை மிகமிக அதிகமாக உள்ளபோது இந்தியாவில் மட்டும் ஆண், பெண் எண்ணிக்கை. ஏறத் தாழ சமநிலையில் உள்ளதற்கு இத்தகை பெண் சிசுக் கொலைகளும் காரணமாகும்.