
இதனை தொடர்ந்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்விடமும் பொதுச் செயலாளர் ஹைதர் அலியிடமும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உயர்காவல்துறை அதிகாரிகளை தொடர்புக் கொண்ட தமுமுக தலைவர் அடையாளபூர்வமாக முற்றுகைப் போராட்டத்தை நடத்தியவர்களை சிறையில் அடைத்தால் அது பெரும் அநீதியாகும் என்று குறிப்பிட்டார். உள்துறை அமைச்சரின் வீடு முற்றுகையிடப்பட்டுள்ளதால் நாங்கள் அவர்களை சிறையில் அடைக்கின்றோம். நாளை அவர்கள் பிணையில் வெளியில் வந்து விடலாம் என்று காவல் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே வள்ளுவர் கோட்டம் அருகில் ஐ.என்.டி.ஜே.வினர் வைக்கப்பட்டிருந்த மாநகராட்சி பள்ளிக்கு அருகில்; தென்சென்னை மாவட்டத் தலைவர் சீpனி முஹம்மது தலைமையில் தமுமுவினர் பெருமளவில் கூடினர். தொடர்ந்து தமுமுக தலைவர் உயர் காவல் அதிகாரிகளிடம் கைதுச் செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலைச் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி வந்தார். இச்சூழலில் இரவு 8.15 மணியளவில் கைதுச் செய்யப்பட்ட பாக்கர் தலைமையிலான அனைவரும் விடுதலைச் செய்யப்படுவதாக தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்விடம் உயர் காவல் அதிகாரிகள் முதலில் தெரிவித்தனர். அதன் பிறகு அனைவரும் விடுதலைச் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்வை தொடர்புக் கொண்ட எஸ்.எம். பாக்கர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். சமுதாய ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி இது என்று குறிப்பிட்டார். கைதான பெண்களும் சிறைக்குச் செல்ல உறுதியாக இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.