ஜாகிர் நாயக் இன்னும் ஏன் நாயக் என்ற பெயரை மாற்றாமல் இருக்கிறார்

சகோதரர் ஜாகிர் நாயக் அவர்கள் இன்னும் "நாயக்" என்னும் பெயரை சுமந்து கொண்டிருப்பது ஏன்?



எழுதியவர்: மும்பைக்கர் , December 14, 2009 21:25

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர் அப்துல் ஹமீத் அவர்களே

// அவர்கள் இன்னும் "நாயக்" என்னும் பெயரை சுமந்து கொண்டிருப்பது ஏன்? //


டாக்டர் ஜாகிர் நாயக் மஹாராஸ்ஹ்டிரா மாநிலத்தை சேர்ந்த கொன்கன் பகுதியினை பூர்வீகமாக கொண்டவர். அவர் தாய்மொழி (மராட்டியும் இந்தியும் கலந்த )கொக்ணி மொழியாகும்.

அவருடைய தந்தையின் பெயர் டாக்டர் அப்துல் கரீம் நாயக், ஆகும். தற்போது மும்பையில் இவர்கள் குடும்பம் வசித்து வருகிறது.

மராத்திய மாநிலத்தில், நாயக், படேல், தாமண்கர், தாண்டேகர், தாக்வே, அஸ்வரே,அந்துலே ... போன்ற குடும்பப் பெயர்கள் மராத்திய முஸ்லிம்களுக்கு இருப்பது சர்வ சாதாரணமான் ஒன்று.

மேலும் தனது பெயர் நாயக் என்பது போராளி என்ற பொருள் தருகிறது, நான் ஒரு போராளியைப் போல் இஸ்லாத்தின் வழியில் ஜிஹாத் செய்கிறேன் மும்பை எனது போர்களம் இதனால் நான் மும்பையை பெரிதும் விரும்புகிறேன். நாயக் என்றால் முஜாஹித் என்று அரபியில் பொருள் என்று ஒரு சொற்பொழிவில் அவர் கூறியுள்ளார்.

மேலும் தவறான பொருள் தராத பெயர்கலை மாற்ற வேண்டிய அவசியம் இஸ்லாத்தில் இல்லை, என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.