டிசம்பர் 6



திருநெல்வேலி மாவட்டம் மேலைப்பாளையம் சந்தை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பாரூக் தலைமை தாங்கினார். மனிதநேய மக்கள் கட்சியின் பொருளாளர் ஹாரூன் ரஷிது கண்டன உரையாற்றினார். எழுச்சியுடன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 350 பெண்கள் உள்பட 3,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாகவே டிசம்பர்6யை கருப்பு தினமாக அனுசித்து மேலைப்பாளையம் முழுவதும் கடையடைப்பு நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.